சேலத்தில் எஸ்.கே.எஸ் மருத்துவமனையின் முதல் முழுமையான லூபஸ் பராமரிப்பு கிளினிக் தொடக்கம்!!!
சேலத்தில் எஸ். கே. எஸ் மருத்துவமனையின் முதல் முழுமையான லூபஸ் பராமரிப்பு கிளினிக் தொடக்கம்!
சேலம், ஜூன் 29
சேலம் நகரில் எஸ்.கே.எஸ் மருத்துவமனையின் முதல் வாதவியல் துறை சார்பில் லூபஸ் பராமரிப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
லூபஸ் என்பது உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கக்கூடிய நீடித்த தன்னுடல் தாக்கும் நோயாகும் .இந்த நோயை திறம்பட நிர்வகிக்க விரிவான பரிசோதனை, தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சையாகும். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி சிறுநீரகவியல், மகப்பேறியல், மகளரியல், நரம்பியல் போன்ற தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த சேவை வழங்கி வருகின்றது.
இந்த புதிய முயற்சியை முன்னிட்டு தனியார் ஹோட்டலில் மருத்துவ கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்வில் பல்வேறு சிறப்பு உரைகள் கூறப்பட்டதில் ,லூபஸ் நோயாளிகளுக்கான கர்ப்பத் திட்டமிடல் மற்றும் முன் கருத்தரிப்பு பராமரிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்புகள், லூபசால் ஏற்படும் தோல் வெளிபாடுகள், மருத்துவ நடைமுறையில் லூபஸை எவ்வாறு பரிசோதித்து கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கும் மூத்த வாதவியல் நிபுணர் டாக்டர் ஜெகநாதன் லுபஸ் நோயை ஆரம்ப நிலையிலேயே, நோயை கண்டறிவதும் சிகிச்சை பலன்களையும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் மருத்துவர்
வி.சுரேஷ்குமரன் முதன்மை நிர்வாக அதிகாரி மருத்துவர் சிற்பி மணி, ருமடாலஜி மற்றும் கிளினிக்கல் இம்யூனாலஜி ஆலோசகர் டாக்டர் விஷ்ணுபிரியா ஆகியோர் தலைமையேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.கே.எஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு லூபஸ் பராமரிப்பு மையம் நோயாளிகளுக்கு தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை தொடர்ச்சியான கண்காணிப்பு நோயாளர் கல்வி மற்றும் பல்துறை சிகிச்சை சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதும் என்று தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0