ரெயின்போ மருத்துவமணை மற்றும் ரெயின்போ கிளினிக்ஸ் 14"வது ஆண்டு துவக்க விழா!!!
ரெயின்போ மருத்துவமனை மற்றும் ரெயின்போ கிளினிக்ஸ்
14 வது ஆண்டு துவக்க விழா!
சேலம் ஸ்வர்ணபுரி,ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தேசிய தரச்சான்று (என்ஏபிஹெச்) பெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரெயின்போ மருத்துவமனை மற்றும் ரெயின்போ கிளினிக்ஸ்-ன் 14 வது ஆண்டு துவக்க விழா குத்துவிளக்கு ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த 13 ஆண்டுகளாக சேலத்தில் அமைந்துள்ள ரெயின்போ மருத்துவமனை மற்றும் ரெயின்போ கிளினிக்ஸ் தேசிய தரச்சான்று (என்ஏபிஹெச்) பெற்று மருத்துவ சேவையில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பயணத்தை 14வது ஆண்டும் தொடர்கிறது.
மருத்துவமனையில் பெண்களுக்கான மகப்பேறு சேவைகள், வலியில்லா பிரசவம், மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தையின்மைக்கான சிகிச்சை, உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன நுண்துளை பிரிவு (கருவருதலை அதிகரிக்கும் நுண்துளை) சிகிச்சை, குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவம், ஒரே நாளில் வீடு திரும்பும் சிகிச்சைகள், சிறுநீரகவியல் மற்றும் ஆண் மலட்டு தன்மைக்கான சிகிச்சை, மயக்கவியல் மருத்துவம், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், உலகத்தரம் வாய்ந்த முழுமைப்படுத்தப்பட்ட பிரசவ அறைகள், மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள். ஸ்கேன் மருந்தகம் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய வசதிகளுடன் மிக சிறந்த முறையில் மருத்துவ சேவை புரிந்து கொண்டு வருகிறார்கள். மேலும் தனியார் காப்பீடு மருத்துவசேவை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சேவையில் இதுவரை, 650 கிராம் எடையுடன் பிறந்த பச்சிளம் குழந்தையினை மிகச்சிறப்பான மருத்துவம் மற்றும் மருத்துவர்களால் உயிர்காக்கப்பட்டு ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளது மற்றும் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உயிர் காக்கப்பட்டுள்ளனர். 10000-க்கும் அதிகமான பிரசவங்கள், 1500-க்கும் அதிகமான பெண்களுக்கு நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. 7500 க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் எங்களது அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குனர், டாக்டர்.ரா குமரவேல், மகப்பேறு மருத்துவர். குழந்தையின்மை மற்றும் அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் துணை நிர்வாக இயக்குனர் டாக்டர்.கோ.ஜெயமாலா, மருத்துவமனை மேலாளர்கள் சி.பழனியப்பன், மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0